7405 கோயில் அரங்க மரபு: பல்லவ-சோழர்கால நாடக அரங்கு.

க.திலகநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (வல்வெட்டித்துறை: ஸ்ரீவாணி அச்சகம், பிரதான வீதி, வல்வெட்டி).

xii, 94 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

நூலாசிரியர், கோப்பாய், யாழ்ப்பாணம் தேசிய கல்விவியற் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். தமிழ் நாடக வரலாற்றில் ஒரு குறித்த காலகட்டத்தைப்பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டத் தேர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை நூலுருவாக்கியுள்ளார். சங்ககால, சிலப்பதிகாரக் கால நாடக மரபுகளுடன் பல்லவ-சோழர் கால அரங்க மரபுகளும் மிக விளக்கமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை அறிமுகம்ஃகி.பி.600ற்கு முற்பட்ட நாடக வளர்ச்சி/ கி.பி. 600-1300 வரையில் நாடகம் பற்றிக் கிடைக்கக் கூடிய தகவல்களும் தகவல்களில் சில விபரிப்புகளும்ஃ கோயில் பண்பாட்டில் அரங்கு/ நடராஜ தாண்டவம்/ 600-1300 வரை தெரிகின்ற ஆட்டம், அரங்கு என்பன/ முடிவுரை ஆகிய ஏழு இயல்களில் விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42744).

ஏனைய பதிவுகள்

Online Gambling games

Blogs Play Totally free Slots Out of One Unit Solitaire: Classic Flip step three Totally free Position Sites & 100 percent free Video slot: Introducing