M.H.S.மஸீதா. (இயற்பெயர்: மஸீதா புன்னியாமீன்). உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 140., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1779-50-4.
சிறுகதை, கட்டுரை, கவிதைத்துறைகளில் தடம்பதித்த திருமதி மஸீதா புன்னியாமீன் அவர்களின் முதலாவது சிறுவர் இலக்கியப்படைப்பு இது. 2010ம் ஆண்டிற்கான இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. தென்னிலங்கையில் காலி நகரில் கட்டுக்கொடை கிராமத்தில் பிறந்த மசீதா திருமணத்தின் பின் கண்டி, கட்டுகஸ்தொட்டை பிரதேசத்திலுள்ள உடத்தலவின்னையை வாழ்விடமாகக் கொண்டவர். உடத்தலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கணித-விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார். காகம், சின்னப் பூனைக்குட்டி, பால்நிலா, எந்தன் செல்லத்தங்கை, நல்லவனாவேன், கோமதி எங்கள் பசு, மழை, தருவாயா, மழை தாருங்கள், கிணற்றுத் தவளை, மாடும் மனிதனும், ஒருதாய் மக்கள் ஆவோம் ஆகிய 12 தலைப்புகளில் இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் வண்ணப்படங்களுடன் இங்கு பிரசுரமாகியுள்ளன.