இக்பால் அலி. கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 18/13, பூரணவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கண்டி: பிரின்ட் எக்ஸ் கிராப்பிக்ஸ்).
24 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8709-00-X.
18 சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல். இலகுவாக மெட்டமைத்து சிறுவர் பாடி ஆடி நடிக்கும் வகையில் எளிமையாக இப்பாடல்களை எழுதியிருக்கிறார். சிறுவர் மத்தியில் இன ஐக்கியம், போர்க்காலம், பொருளாதாரம், தொழில்நுட்பம், இயற்கை, நற்பண்பு, கல்வி போன்ற பதிவுகளை உள்ளடக்கிய பாடல்கள் இவை. நூலாசிரியர் சாய்ந்த மருது 17ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏழாவது வெளியீடு இதுவாகும்.