சபா. அருள் சுப்பிரமணியம். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).
64 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 90., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-1997-24-3.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கவிஞர் சபா.அருள் சுப்பிரமணியம் சிறுவர் நூல்களையும், ஒலிஃஒளிவட்டுக்களையும் வெளியிட்டு வருபவர். இந்நூலில் இவர் எழுதியுள்ள பாடல்களில் இசைமணம் கமழ்ந்து இழையோடுவதைக் காணலாம். சின்னச் சின்னச் சொற்களில் குழந்தை இயல்பு அறிந்து அதற்குத் தெரிந்த பாடுபொருள்களில் கவிதை எழுதியுள்ளார். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, ஆடு, மாடு, கோழி எனக் குழந்தைகள் உலகின் பாத்திரங்களோடு, அறிவியல் உலகில் பயன்படுத்தப்படுகின்ற வானொலி, கணினி, தொலைக்காட்சி போன்றவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தன் பாடல்களில் சொல்லியிருக்கிறார்.