7424 சட்டியும் குட்டியும்: சிறுவர் நாடகங்கள் இரண்டாவது தொகுதி.

மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 71 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-29-8.

8 முதல் 13 வயதினர் நடிக்கவும், ரசிக்கவும் இந்த நாடகங்கள் ஏற்றவை. கோழிக் கர்வம், சட்டியும் குட்டியும், கோயிலும் ரி.வியும், தூரத்தில் ஒரு நாய், கடைசி நாடகம், பூனையும் எலிகளும், மறதி, கழுதை, சின்னச் சிட்டு ஆகிய ஒன்பது சிறுவர் நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை நித்தியானந்தன் 70களில் மொரட்டுவையில் உயர்கல்வி கற்றவேளையில் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு அதன் பின் ஈழத்தமிழர்கள் மத்தியில் பல நாடகங்களால் இவர் அறியப்பட்டவர். இவரது நாடகங்களை அரசியல் அங்கத நாடகங்கள் மற்றும் சமூக அங்கத நாடகங்கள் என இருவகைப்படுத்தலாம். திருவிழா என்ற இவரது நாடகம் ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய முதல் தெருவெளி நாடகமாகக் கருதப்படுகின்றது. 1989இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர் இவர் தயாரித்த கண்டம் மாறியவர்கள் என்ற அரசியல் அங்கதச்சுவைமிகு நாடகம் புகலிடத்தில் பிரபல்யமாகியது.

ஏனைய பதிவுகள்

9058 குறியீட்டு அளவையியல்: பெறுகைமுறை துணைப்பெறுகை.

எஸ்.கே.கேசவதாசன்.  தெகிவளை: க.கேசவன், 219/8, காலி வீதி, இணைவெளியீடு, கார்த்திகேயன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு: கார்த்திகேயன் பிரைவேற் லிமிட்டெட்). iii,  63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.

10824 உந்தூழ்.

மலர்க் குழு. கொக்குவில்: அமரர் அருணாசலம் சரவணமுத்து குடும்பத்தினர், சாந்தி நிலையம், பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, ஆனி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).