7425 சின்னச் சின்ன நாடகங்கள்: சிறுவர் நாடகங்கள் முதல் தொகுதி. 

மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).

x, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-28-1.

5 முதல் 10 வயதினர் நடிக்கவும், ரசிக்கவும் இந்த நாடகங்கள் ஏற்றவை. மூன்று ஆடுகள், பிறந்த நாள், கரடி, என்ன சாப்பாடு, இஞ்சி விசுக்கோத்தன், நெல்மணி, கெட்டவர் சுபாவம், சின்ன உதவி, கோழிகளும் நரிகளும், கரடி பிடிக்கப் போகிறோம், இது எது, பலூன்கள், விளையாட வாங்கோ, பூதம், பலசாலியும் புத்திசாலியும், பூனைச் சண்டை ஆகிய 16 சிறு நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை நித்தியானந்தன் 70களில் மொரட்டுவையில் உயர்கல்வி கற்றவேளையில் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு அதன் பின் ஈழத்தமிழர்கள் மத்தியில் பல நாடகங்களால் இவர் அறியப்பட்டவர். இவரது நாடகங்களை அரசியல் அங்கத நாடகங்கள் மற்றும் சமூக அங்கத நாடகங்கள் என இருவகைப்படுத்தலாம். திருவிழா என்ற இவரது நாடகம் ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய முதல் தெருவெளி நாடகமாகக் கருதப்படுகின்றது. 1989இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர் இவர் தயாரித்த கண்டம் மாறியவர்கள் என்ற அரசியல் அங்கதச்சுவைமிகு நாடகம் புகலிடத்தில் பிரபல்யமாகியது.

ஏனைய பதிவுகள்

10504 உயில்: நூலகக் கவிதைகள்.

க.நவநீதகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, 2015.(யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்). x, 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1383-06-0. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உதவி