7428 கதைக் கனிகள்.

வி.அரியநாயகம். கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park ,1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).

126 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 240., அளவு: 21×15 சமீ., ISBN: 955-0367-15-3.

வி.அரியநாயகம் யாழ்ப்பாணத்தின் சுன்னாகம்-வரியப்புலத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னாளில் யாழ். செங்குந்தா இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வுபெற்றவர். தன் இறுதிக்காலத்தில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் வசித்த இவர் 2010இல் அமரத்துவம் அடைந்தார். 2009இல் கதைக்கோலங்கள் என்ற நூலை சிறுவர்களுக்காக எழுதிய இவரது இரண்டாவது நூல் அவரது மறைவின் பின்னர் வெளிவருகின்றது. இதில் பயில்வான் சீனி, அதிர்ஷ்டசாலி ஜோன், மாயாஜால மத்தளம், இனி ஊருக்குப் போகவேணும், சிறகு ஒடிந்த பறவை, சேவலும் நரியும், கைதியைக் காப்பாற்றிய பூனை, இளவரசி எலி, நான்கு குழி முயல்கள், தவளைக்குப் புள்ளி வைப்பது யார், மக்களைப் பிரளயத்தில் காத்தது, வியத்தகு வீர குடிமக்கள், பறவைகளை நேசித்த பணக்காரன், அரச மரத்தின் கதை, பூனையும் எலியும் ஆகிய 15 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14132 சுழிபுரம்-பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

04.04.2004. பால. கோபாலகிருஷ்ண சர்மா (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: வாக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). iii, 92 பக்கம்,

15353 மரணத்தை வருவிக்கும் முப்பொருள்கள்.

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). (4), 12 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ. மனிதகுலத்துக்குக் கேட்டையும், பேராபத்தையும்