ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14.1., டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
vi, 43 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-51451-7-6.
சாதனை படைத்தவர்கள், சாதனையாளர்கள், கிளிக்குஞ்சு மலை, தூக்கணாங் குருவிக்கூடு, உன்னைப் பெற்றதால்… ஆகிய ஐந்து சிறுவர் கதைகள். ஒவ்வொரு கதையிலும் மாணவர்கள் படைக்கும் சாதனைகளை வெவ்வேறு சூழலில் கவர்ச்சிகரமாகச் சொல்லியிருக்கிறார். கூட்டுறவு, ஒத்துழைப்பு, சமூகத் தொடர்பு, இரக்கம், அன்பு, சமூக நலன் ஆகிய போதனைகளை வழங்கும் கதைகள் இவை. சாதனை படைத்தவர்கள் என்ற கதை சீர்கெட்டிருந்த பாடசாலையை சிரமதானப்பணிமூலம் திருத்தி வளமாக்கும் செய்கையை விளக்குகின்றது. சுனாமி அநர்த்தத்தில் மாணவர் உதவிய மனப்பாங்கை சாதனையாளர்கள் என்ற கதை காட்டுகின்றது. கிளிக்குஞ்சுமலை மாணவரிடையே காணப்படும் இரக்கசுபாவத்தை காட்டுகின்றது. உயிர்களிடத்தில் அன்புவேண்டும் என்று போதிப்பது. சுதந்திரமாக வாழ்ந்துவந்த பறவைகளைச்சிறைப்பிடித்துச்சென்ற தீயவர்களிடமிருந்து அவற்றை மீட்டுத் தமது இயற்கை வாழிடத்தில் சேர்ப்பிக்கும் மாணவர்கள் பற்றியது. தூக்கணாங் குருவிக்கூடு- குஞ்சுகளிடமிருந்து பிரிந்த தாய்ப்பறவைகளை அவற்றின் குஞ்சுகளிடம் சேர்ப்பிக்கும் கதை இது. பறவைகள், மிருகங்கள் போன்ற பிற உயிர்களிடம் இரக்கம் வைக்கும் எண்ணத்தை உருவாக்குகின்றது. உன்னைப் பெற்றதால்… என்ற கதை உழைப்பினால் உயர்வினைப் பெறலாம் என்ற தத்துவத்தை போதிப்பது. குடும்பப் பொருளாதாரச் சுமையைத் தாமும் தாங்கி உழைத்து, அதேவேளையில் கல்வியிலும் உயர் தரத்தை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் பற்றியது இக்கதை. கேணிப்பித்தன் என்றும் இலக்கிய உலகில் அறியப்பெற்றவர் ச.அருளானந்தம்.