7430 சின்னச் சின்னக் கதைகள்.

மாவை நித்தியானந்தன் (கதை), மருது (ஓவியங்கள்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, மார்ச் 1994. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).

24 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 200., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-1997-25-0.

இந்நூலில் உள்ள கதைகள் 2000வருடங்களுக்கு மேலாக வாழும் கதைகள். இவற்றைப் புதிய வடிவத்தில் தமிழ்க் குழந்தைகளுக்குக் கொண்டுவருகிறது இந்நூல். இலகுவான தமிழ், இனிய நடை, மட்டான சொற்கோவை, இவை இந்நூலின் சிறப்பு அம்சங்கள். ஓவியங்கள் கதைகளுக்கு மேலும் கவர்ச்சியைத் தருகின்றன. கர்ணபரம்பரைக் கதைகளாகவிருந்த பல சிறுவர் கதைகளை இந்நூலில் மாவை நித்தியானந்தன் தொகுத்திருக்கிறார்.  காகமும் தண்ணீரும், கொக்கும் நரியும், நரியும் திராட்சைப் பழமும், ஓநாயும் நிழலும், பொன் முட்டை வாத்து, முயலும் ஆமையும், மாடும் சுண்டெலியும், காற்றும் சூரியனும், கறுப்பும் வெள்ளையும், சிறுவனும் ஓநாயும், நியாயம், எறும்பும் புறாவும், குழந்தையும் ஓநாயும், கழுதையும் மனிதர்களும், உடலுக்குள் நடந்த சண்டை ஆகிய காலத்தால் அழியாத கதைகளின் தொகுப்பு இது. மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை நித்தியானந்தன் 70களில் மொரட்டுவையில் உயர்கல்வி கற்றவேளையில் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு அதன் பின் ஈழத்தமிழர்கள் மத்தியில் பல நாடகங்களால் இவர் அறியப்பட்டவர். இவரது நாடகங்களை அரசியல் அங்கத நாடகங்கள் மற்றும் சமூக அங்கத நாடகங்கள் என இருவகைப்படுத்தலாம். திருவிழா என்ற இவரது நாடகம் ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய முதல் தெருவெளி நாடகமாகக் கருதப்படுகின்றது. 1989இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர் இவர் தயாரித்த கண்டம் மாறியவர்கள் என்ற அரசியல் அங்கதச்சுவைமிகு நாடகம் புகலிடத்தில் பிரபல்யமாகியது.

ஏனைய பதிவுகள்

No-deposit Slots

Posts Withdrawal Constraints On the No deposit Incentives What exactly are Popular Errors Participants Make With On-line casino Incentives? Eligible Video game How often Must