7452 கல்வாரிப் பரணி.

நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).

(3), 53 பக்கம், சித்திரங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

தமிழ் மொழியிலுள்ள 96 சிற்றிலக்கிய வகைகளுள் பரணியும் ஒன்று. அது போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவது. பெரும்போர் புரிந்து வெற்றியீட்டிய ஒருவனைப் புகழ்ந்து பாடுவதையும் பரணி என வழங்குவர். தலைவனின் பல்வேறு சிறப்புகளை கடவுள் வாழ்த்து, கடை திறப்பு,  தேவி பாடியது, அவதாரம், போர் பாடியது, களம் பாடியது போன்ற பல்வகை உறுப்புகளைக் கொண்டு கலித்தாழிசையாற் பாடப்படுவது பரணி என்பர் புலவர்.  அலகையுடன் சமரிட்டு, அதன் ஆட்சியை முடித்து அருளின் அரசை நிறுவுவதற்காக, இறை மகன் இயேசு இவ்வுலகில் பிறந்தார். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்போரின் இறுதிக்கட்டம் கல்வாரிக் குன்றில் நிகழ்ந்தது.  சிலுவை மரத்தில் எழுந்து தன்னுயிர் துறந்து அதன் மூலம் அலகையின் ஆதிக்கத்துக்குச் சாவுமணியடித்து வெற்றிவாகை சூடினார் இயேசு. அக் கல்வாரி வெற்றியையும் அதற்கு இட்டுச்சென்ற சமரின் ஒருசில கட்டங்களையும் நினைவுபடுத்தி இயேசு என்னும் திருக்குமரனை நாடக வடிவமாகச் சிறப்பிப்பது கல்வாரிப் பரணி.

ஏனைய பதிவுகள்