சிவசம்புப் புலவர் (மூலம்), செவ்வந்திநாத தேசிகர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஈழகேசரி நா.பொன்னையா, திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
viii, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12 சமீ.
ஆரிய திராவிட பண்டிதர் செவ்வந்திநாத தேசிகர் தொகுத்தருளியுள்ள இந்நூலில் சிவசம்புப்புலவர் பாடியருளிய இராமநாதபுரம் பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை, பாற்கர சேதுபதி நான்மணிமாலை, பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை, மயில்வாகன வம்ச வைபவம், பிரபாவப் பாமாலை, பருத்தித்துறைக் கலித்துறை, வல்வைக் கலித்துறை ஆகிய செய்யள்களும், தனிச்செய்யுள்களாக இராமநாதபுரம் பாற்கர சேதுபதி, அனைக்குடி இராமசுவாமிப்பிள்ளை, இராமேசுவரம் இபுராம்கிப் சாகிபு, இராமேஸ்வரம் சிதம்பரப்பிள்ளை, சித்தங்கேணி வைத்தியலிங்கப்பிள்ளை, கரவைச்சிற்றம்பல முதலியார், யாழ்.பறங்கித்தெரு மனுவற்பிள்ளை, முல்லைத்தீவு மயில்வாகனம்பிள்ளை, நவிண்டிற் சதாசிவக் குருக்கள், மானிப்பாய் நாகைலிங்கபிள்ளை, வண்ணை நாகைலிங்கப்பிள்ளை, சுன்னாகம் வேற்பிள்ளை, கொக்குவில் முருகேசபிள்ளை, துன்னாலை வேட்கோவர், சரசாலைத் திருஞானசம்பந்தபிள்ளை, தாயார் கதிராசிப்பிள்ளை, ஆனைக்கோட்டை முத்துக்குமாரபிள்ளை, புலோலி மயில்வாகனப்பிள்ளை, கோப்பாய் அ.சுப்பிரமணியபிள்ளை, கோப்பாய் அ.மயில்வாகனம் ஆகியோரின் பேரிற் பாடப்பெற்ற செய்யுள்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2370. யாழ்ப்பாணப் பொது நூலகத்திலும் உள்ளது. சேர்க்கை இலக்கம் 129235).