த.மனோகரன். யாழ்ப்பாணம்: திருவருள் வெளியீடு, உமாபதி, கொழும்புத்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1997. (கொழும்பு 2: கலர் டொட்ஸ் நிறுவனம், 31/21 டோசன் வீதி).
55 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 40., அளவு: 17×12 சமீ.
இறைவா உன்னைத்தான் என்ற தலைப்பில் ஏற்கெனவே தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்ட த.மனோகரன், இந்நூல் வழியாகத் தனது இரண்டாவது கவிதைத் தொகுதியை வழங்கியுள்ளார். முன்னைய நூல் போன்றே இந்நூலிலும் இலங்கைத் திருத்தலங்கள் பலவற்றில் அமர்ந்து அருள்புரியும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ள பாடல்கள் அடங்கியுள்ளன.