எம்.நவாஸ் சௌபி. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (சென்னை 60005: மணி ஓப்செட்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-57-2.
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று இவருடையது. ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும் பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத-தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை. கிழக்கிலங்கையில் சாய்ந்தமருது- இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நவாஸ் சௌபி. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக நிர்வாகமாணிப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தவர். ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார்.