நெடுந்தீவு முகிலன். (இயற்பெயர்: வி.முகிலன்). நெடுந்தீவு 13: வி.முகிலன், 1வது பதிப்பு, மார்ச் 2009. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: ஜெயா அச்சகம்).
(10), 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.,அளவு: 19×14 சமீ.
தவழும் பருவம் முதல் புள்ளி. பள்ளிப்பருவம் இரண்டாவது புள்ளி. வாலிபப் பருவம் கடைசிப் புள்ளி. மூன்று புள்ளிகளின் கூட்டுத்தொகையே அகேனம் என்னும் ஆய்த எழுத்து. தவழும் பருவத்தில் பொங்கல் பானை வைத்த அடுப்பின் மூன்று முனைகளிலும், பள்ளிப் பருவத்தில் பார்த்த தமிழ்ப் பாடப்புத்தகத்திலும், வாலிபப்பருவத்தில் ஒரு பெண்ணின் இருவிழிகளினதும் நெற்றிப் பொட்டினதும் கூட்டுச் சேர்க்கையிலும் தான் கண்ட ஃஆய்த எழுத்தின் வடிவத்தை அடிப்படையாகவைத்து இந்த ஹைக்கூ காதல் கவிதைகளைப் படைத்திருக்கிறார். தமிழுக்குத் தான் ஆய்த எழுத்து. தனக்கோ ஆனந்த எழுத்து என்கிறார் இவ்விளம் கவிஞன் முகிலன்.