சூசை எட்வேட். திருக்கோணமலை: அகில இலங்கை இளங்கோ கழகம், 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ், 58 வித்தியாலயம் வீதி).
ix, 103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-50038-3-4.
பெரும் சான்றோர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை 1030 இருவரிக் குறள்களாகத் தந்திருக்கிறார். சில இடங்களில் கவிதைகளின் சாயலும், சில இடங்களில் வசன நடையும், மேலும் சில இடங்களில் இரண்டும் சேர்ந்தும் இவரது கருத்துக்கலசம் அமைகின்றது. நீங்களும் எழுதலாம் கவிதை இதழில் தெருக்குரல் என்ற தலைப்பில் இவை வெளிவந்தன. பின்னர் மல்லிகை, ஜீவநதி இதழ்களிலும் அவ்வப்போது சில குறள்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தினதும் தொகுப்பாகவே இந்நூல் அமைகின்றது. நூலின் கருத்துக்களில் துலக்கமாகத் தெரிபவை ஆன்மீகம், அரசியல், குடும்பம், காதல், கல்வி, வறுமை, மென்மை, சுகாதாரம், விடுதலை வேட்கை என்பனவாகும். இவை பெரும்பாலும் நமது முன்னோரின் பொன்மொழிகள், முதுமொழிகளிலிருந்து பெறப்பட்டவை.
கருத்துக் கலசம்.
சூசை எட்வேட். திருக்கோணமலை: அகில இலங்கை இளங்கோ கழகம், 2வது பதிப்பு, ஜுலை 2020, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி).
108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-50038-3-4.
இப்பதிப்பு சுகந்தன்-வின்சிகா தம்பதியினரின் திருமணப்பரிசாக 05.07.2020 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.