7486 கவிதைப் பூம்பொழில்.

க.வேந்தனார். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 2வது பதிப்பு, ஜனவரி 2010, 1வது பதிப்பு, 1964. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை).

248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-89748-85-2.

வித்துவான் வேந்தனார் 1964இல் யாழ்ப்பாணத்தில் 178 பக்கங்களில் சைவப்பிரகாச அச்சியந்திரசாலையின்மூலம் அச்சிட்டு வெளியிட்ட நூலின் திருத்திய 2வது பதிப்பு இது. 32 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் இவர். 1940களில் எழுத்துலகில் இறங்கியவர். கவிஞர், குழந்தைக் கவிஞர், கட்டுரையாசிரியர், உரையாசிரியர் எனப் பல நிலைகளிலும் தனித்துவம் பெற்றவர். முதற்பதிப்பு கிடைத்தற்கரியதான இந்நிலையில் வெளிவரும் இப்பதிப்பில்,  முதற்பதிப்பில் இடம்பெறாத  கவிதைகளுடன் வேறும் பல கவிதைகளையும் தேடி இணைத்துள்ளனர். தெய்வம், தமிழ், சான்றோர், குழந்தை மொழி, நாடு, வாழ்வு,  காவியம் முதலான தலைப்புகளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  வித்துவான் வேந்தனாரின் இலக்கிய வாழ்வின் பின்புலத்தை ஆய்வுக்குட்படுத்துவோருக்கு முழுமையான தரிசனத்தை வழங்கத்தக்க சில பின்னிணைப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்