7490 காரணமாலை.

சேகுத் தம்பிப் புலவர். கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ், 20/14, சைமண்ட்ஸ் வீதி, 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1878. (கொழும்பு 10: றிசானா பப்ளிஷர்ஸ்).

xii, (16), 184 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ, ISBN: 955-8138-06-1.

நபிகள் நாயகத்தின் இளமைக்கால வரலாற்றினைக் குறிக்கும் கவிதைமாலை இது. நபிநாயகம் பூர்வீகத்திலுண்டான சிறப்பு முதல், திருமக்கநாட்டுச் சிறப்பு, நபிநாயகமவதாரச் சிறப்பு, என்று வளர்ந்து நபிநாயகம் நபிப்பட்டம் பெற்ற சிறப்பு, நபிநாயகம் அரசியற்றிய சிறப்பு, மன்றாட்டம், துவாக் கேட்குதல், வாழிச் சிறப்பு என்பன ஈறாக மொத்தம் 30 தலைப்புகளில் இக்கவிதைகள் இயற்றப்பட்டு ஒரு வாழ்க்கை வரலாற்றுக் காவியமாக மிளிர்கின்றது. மூலநூல்; யாழ்ப்பாணம் சாமுனாலெப்பையவர்கள் குமாரர் சேகுத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. தஞ்சாவூர் ஹக்கீம் நக்கர் சாஹிபுவின் குமாரர் நேகப்துல் காதிறு சாஹிபு அவர்களின் பொருளுதவியால் காயற்பட்டணம் கண்ணகுமது மகுதூம்பிள்ளையின் குமாரர் மகுதூமுகம்மதுப் புலவரவர்களால் பார்வையிட்டுப் பிழையறத் திருத்தப்பட்டு சென்னப்பட்டணம் கொ.மாணிக்க முதலியார் அவர்களின் மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தில் ஜுன் 1878 இல் அச்சிடப்பட்டது. இது மூலநூலின் இரண்டாவது பதிப்பாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 570261).

ஏனைய பதிவுகள்

Jak Spisać Artykuł

Content Jak Podać Zarzewie: Zagraj online mahjong 88 Artykuł W całej Gazecie Na temat Nowej Polityce Dok Bibliograficzny Gazet Jak i również Prasy Po Spider’s