சண்முகம் சிவலிங்கம். நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, இணைந்து வெளியிடுவோர்: லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 60005: மணி ஓப்செட்).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-81-89359-97-3.
பிற நல்ல கவிஞர்களினதையும் போன்றே சண்முகம் சிவலிங்கத்தினது கவிதையும் அவரது முகமாக இருக்கின்றது. அது அவரிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவரது கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப்பற்றிய கவிதைகள்தான். சண்முகம் சிவலிங்கம் (1939) கிழக்கிலங்கையில் கல்முனை நகருக்கு அருகில் பாண்டிருப்பு கிராமத்தில் பிறந்தவர். 1960 முதல் எழுதிவருபவர். நீர்வளையங்கள் (1988) இவரது முதலாவது கவிதைத் தொகுதி.