7495 சிறகு முளைத்த தீயாக…

மட்டுவில் ஞானக்குமாரன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64).

xx, 124 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-8741-45-0.

முகம் அறியா வீரர்களுக்காக (2000), வசந்தம் வரும் வாசல் (2002) ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வரும் கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனின் மூன்றாவது கவிதைத் தொகுதி இதுவாகும். போர்க்கால அனுபவங்கள் இவரது கவிதைகளுள் பதிவாகியுள்ளன. போர், வன்முறை என்பவற்றைத்தாண்டி நெஞ்சில் சுரக்கும் மென்மையான காதல் அனுபவங்கள் பற்றியும் சில கவிதைகள் பேசுகின்றன. குறுகிய மதவாத, இனவாதப் பூசல்களைத் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் கொண்ட இவரது கவிதைகளில் மனிதநேய உணர்வுகள் ஓங்கி ஒலிக்கின்றன. மு.மேத்தா, பா.விஜய், கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் ஆகியோரின் முன்னுரைகளுடன் கூடிய கவிதைத் தொகுதி இது.

ஏனைய பதிவுகள்