8002 சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 2.

பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கண்டி: சீ.வீ.பப்ளிஷர்ஸ், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை).

196 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1779-44-3..

சர்வதேச நினைவுதினங்கள் ஒரு குறித்த விடயத்தை மையப்படுத்தி அவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுவதுடன் குறித்த விடயத்தை நினைவு கூருவதாகவும் அமைகின்றது. இத்தினங்கள் பல ஐ.நா.சபையினால் அங்கீகரிக்கப்பட்டவை. மேலும் சில குறித்த விடயம் தொடர்பான சர்வதேச கவன ஈர்ப்பினைப் பெறும்வகையில் சர்வதேச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படுபவை. பீ.எம்.புன்னியாமீன் தினக்குரல் வார இதழில் தொடராக எழுதிய சர்வதேச நினைவுதினங்கள் தொடர்பான 22 கட்டுரைகள்  இந்நூலில் தனித்தொகுப்பாக இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10466 பேனாவினால் பேசுவோம்: சிறுவர் கட்டுரைகள் பகுதி 2, தரம் 6-8.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2014. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 74 பக்கம்,