த.ந.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 6வது பதிப்பு, பெப்ரவரி 1992, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
92 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ.
இலங்கை, உலகநாடுகளின் அண்மைக்கால நடப்பாண்டு விவகாரங்களுடன் கூடிய பொது அறிவு நூல். அரசினர், அசிரியர் மற்றும் தெரிவுப்பரீட்சைக்காகிய திருத்திப் புதுக்கிய விசேட பதிப்பு. பரீட்சைக்கு வரக்கூடிய விடயங்களை மாத்திரம் தாங்கி வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்குரிய விரிவான மாதிரி வினாப்பத்திரம் ஒன்றும் விடையுடன் தரப்பட்டுள்ளது. பத்திரிகைத்தாள் தட்டுப்பாட்டுக் காலத்தில் அப்பியாசக் கொப்பிக்கான கோட்டுத்தாளில் அச்சிடப்பட்ட நூல் இது. முதற்பதிப்பு 1963இலும் இரண்டாம் பதிப்பு 1968இலும் வெளிவந்தது. பின்னர் திருத்திய மூன்றாம் பதிப்பு 1970இல் வெளிவந்தது. தொடர்ந்து விஷேட பதிப்பொன்று 1981இலும், புதுக்கிய விஷேட பதிப்பு 1984இலும் ஏற்கெனவே வெளிவந்திருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86791).