செ.யோகராசா. இலங்கை: கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 2010. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(2), 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர் தொடர்பான நினைவுப் பேருரை 1989 முதல் வருடம் தோறும் கிழக்குப் பல்கலைக்கழகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது. 19.07.2010இல் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரால் நிகழ்த்தப்பட்ட பதினான்காவது சுவாமி விபுலாநந்தர் நினைவுப்பேருரையின் நூல்வடிவம் இது. ஈழத்தின் நவீன இலக்கிய உருவாக்கத்தில் மண்டூரிலிருந்து வெளிவந்த பாரதி என்ற சஞ்சிகையின் பங்களிப்புப் பற்றியதாக இவ்வுரை அமைகின்றது. 1948-1950 காலகட்டத்தில் பாரதி இதழ் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் பதிப்பாசிரியராக ம.நாகலிங்கமும், நிர்வாக ஆசிரியராக க.செபரத்தினமும், பிரசுரகர்த்தாவாக கு.த.குருமூர்த்தி என்பவரும் இயங்கினர்.