கஜானி சச்சிதானந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: நூலகம் நிறுவனம் (Noolaham Foundation), 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2012. (கொழும்பு 6: ஸ்ரீ டிஜிட்டல் பிரஸ், இல.40- B1, காலி வீதி).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
ஈழத்தவரின் நூல்களில் இணையத்தில் தரவேற்றம் செய்து இணைய நூலகமொன்றை உருவாக்கும் நோக்குடன், 2005இல் உருவான நூலகத்திட்டத்தின் வளர்ச்சிப்படியாக கொழும்பில் 2008இல் தொடங்கப்பட்டதே நூலக நிறுவனம் (Noolaham Foundation). இவ்வமைப்பு இதுவரை காலமும் ஈழத்தவரின் நூல்களுடன் சேர்த்து ஈழத்துச் சஞ்சிகைகளையும் இணையத்தில் பதிவுசெய்துவைத்துள்ளது. இச்சஞ்சிகைகளை ஆய்வாளர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக 400க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் பெயர்ப் பட்டியலை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 2012 ஜுன் முதல் வாரம் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய விழாவினையொட்டி இக்கைந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.