ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல.891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).
ix, 106+180 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 21×14.5 சமீ.
Bishop Savundram Media Centre மூலமாக வெளியிடப்படும் பத்திரிகையியல் சார்ந்த ஒன்பதாவது நூல் இது. இரு பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதல் 106 பக்கங்களும் ஒரு பத்திரிகையின் கருத்தைத் தெரிவிக்கும் ஆசிரியத் தலையங்கம் பற்றிய விரிவான விளக்கங்களை 15 இயல்களில் பதிவுசெய்கின்றன. ஆசிரியத் தலையங்கங்கள் பற்றிய பத்திரிகை ஆசிரியர்களின் அனுபவப் பகிர்வுகள் நேர்காணல்களாக இப்பகுதியின் இறுதியில் பதிவுசெயயப்படுகின்றன. இரண்டாம் பிரிவு தனிப்பக்க எண்ணிக்கையில் 180 பக்கங்களில் தொடர்கின்றன. இப்பிரிவில் வரலாற்று முக்கியத்துவமானவையும், கவனத்தை ஈர்த்தவையுமான ஏராளமான ஆசிரியத்தலையங்கள் மீள்பிரசுரமாகியுள்ளன. பத்திரிகைத்துறையில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்ற ஆசிரியர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை, பிரித்தானியாவில், ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டவர். பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இணைப்பாளராகவும் பணியாற்றிய இவர், யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் நினைவாக, Bishop Savundram Media Centre என்ற பத்திரிகையியல் கல்வி நிறுவனத்தை உருவாக்கி இயக்கி வருகின்றார்.