பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.எண் 01, பொல்கொல்ல, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (கண்டி: அச்சீட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், த.பெ.எண் 01, பொல்கொல்ல).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-1779-68-9.
சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாக வெளிவந்த ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா என்ற நூலில் இலங்கையின் பிரபல உளவளவியலாளர் யூ.எல்.எம்.நௌபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும், உளவியல் அடிப்படைகளும் பதிவாகியிருந்தது. மனோதத்துவ நிபணரான யூ.எல்.எம்.நௌபர் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராக சுமார் நான்கு தசாப்தகாலமாக இலங்கையில் அறியப்பட்டவர். இனமதபேதம் கடந்த அவரது சேவை – சுமார் 2500 பேரை இலவச உளவியல் சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தியுள்ளது. அவரது நூல் வெளியீட்டு விழா 25.2.2013 அன்று கொழும்பில் நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட கைந்நூல் இதுவாகும். நிகழ்ச்சி நிரலுடன், நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் பதிவுகளாக அமைந்த இச்சிறு நூலில், விழாவின் பேராளர்கள் பற்றியும், அந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் பற்றியும் சிறு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிந்தனை வட்டம்-ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் விரிவான கட்டுரையும் இறுதியில் இடம்பெற்றுள்ளது.