எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, சித்திரை 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுண்ட் கார்மல் வீதி, குருநகர்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ.
விஞ்ஞானம் என்றால் என்ன? விஞ்ஞான முறை என்றால் என்ன? விஞ்ஞானத் தரவுகள் என்பன யாவை? அவதானம், பரிசோதனை, அவதானமும் பரிசோதனையும், தீர்ப்புப் பரிசோதனை, இயற்கைப் பரிசோதனை, சோதனை, அனுபவ சோதனை- நோக்கல்-பரிசோதனை என்பவற்றை வேறுபடுத்திக் காட்டல், அவதானமும் பரிசோதனையும் ஏன் விஞ்ஞான சோதனைகளாகக் கொள்ளப்படுகின்றன? அவதானத்தில் ஏற்படும் போலிகள், விஞ்ஞானத்தில் பிரச்சினை என்பதன் பொருளென்ன? கருதுகோள் என்பதன் பொருள், அது எவ்வாறு ஏற்கப்படுகின்றது அல்லது நிராகரிக்கப்படுகின்றது? நேர்ச் சோதனைகள், நேரல் சோதனைகள், எதிர்வு கூறல், தன்மறுப்பு எதிர்வுகூறல் ஆகிய இன்னோரன்ன 29 விடயங்களை இந்நூல் விளக்குகின்றது. தமிழ்மொழிமூலம் அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்ற பாடத்திட்டத்தைக் கற்கும் ஜீ.சீ.ஈ உயர் வகுப்பு மாணவர்களுக்கும், ஜீ.ஏ.கியூ மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இக்குறிப்புகள் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.