8099 அத்வைதமும் சாயி அவதாரமும்.

சு.சிவதாஸ். யாழ்ப்பாணம்: சாயி சரவணமுத்து, சத்யசாயி வேதாந்த தபோவனம், 9, கண்டி வீதி, நாவற்குழி, கைதடி, 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

(10), 110 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 22., அளவு: 21.5×14 சமீ.

சத்யசாயி பாபாவின் 50ஆவது ஆண்டு நிறைவினையொட்டிப் பிரசுரமாகியுள்ள நூல். இரு பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற் பிரிவில், வேதாந்தமும் சித்தாந்தமும், கடவுள் இருக்கிறார், மறுபிறப்புக்கள், மனிதனின் உடலமைப்பு, உருவக் கடவுளும் அருவக் கடவுளும், ஞானமார்க்கம், சங்கர வேதாந்தமும் சிவசோதி விளக்கமும், அவதார வருகையும், சமுதாய வளர்ச்சிக்கு அத்வைதம் எவ்வாறு உதவுகின்றது, புலால் உண்ணல், கர்மம், பக்தி, வேதாந்த சித்தாந்த ஒற்றுமை வேற்றுமைகள் ஆகிய தலைப்புகள் கொண்ட கட்டுரைகளும், இரண்டாம் பிரிவில் பின்னிணைப்புகளும் இடம்பெறுகின்றன. பின்னிணைப்பகளாக சாயி யார்?, சமூக வாழ்வும் ஆத்மீக சாதனையும், ஆத்மீக சாதனைகள் பற்றி பகவான் சாயி பேசுகிறார், சத்யசாயி பாபாவின் கடித மறுமொழியின் சுருக்கம், இயேசுவும் சத்யசாயி பாபாவும் நீங்களும், சாயி சரவணமுத்து அருளிய சில பாடல்கள், புராணப் பின்னணிக் கதைச் சுருக்கங்கள், சாயி பேசுகிறார், சாயிபாபா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது கருத்துக்கள் அடங்கிய மனம் என்ற கட்டுரை, மூன்று விதமாக அத்வைதம் ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  81041).

ஏனைய பதிவுகள்