8098 ஸ்ரீமத் பகவத்கீதை கதைகள்: சுலோகம், உரை, விளக்கம், கதைகள்.

கே.வி.குணசேகரம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

xiii, 552 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14 சமீ.

பகவத் கீதையானது சமய நூலாக, பக்தி நூலாக, ஞான நூலாக, தத்துவ நூலாக, சமரச சன்மார்க்க நூலாகப் போற்றப்படுவது. வடமொழியில் மூலநூல் எழுதப்பட்டிருப்பினும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் செழுமையை-ஆழமான கருத்தை நவீன வாழ்வுடன் பொருத்திப்பார்க்கும் வகையில் இதிலுள்ள கதைகள் ஆசிரியரால் உருவாக்கப்பட்டுள்ளன. கீதையின் சுலோகங்களைத்தந்து அதற்கான உரை விளக்கத்தையும் அதனை விளக்கும் வகையில் ஒவ்வொரு கதைகளையும் எழுதித்தந்துள்ளார். இலங்கையின் வடபுலத்தின் கோப்பாய் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் 1968 முதல் எழுதி வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

15632 ஐங்குறுநூற்று அரங்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 400+44 பக்கம்,