8101 இந்து நாகரீகம்: தரிசனங்களும் வாழ்வியலும்.

சிவ. மகாலிங்கம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).

xvi, 309 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-275-7.

க.பொ.த.(உயர்தர) இந்த நாகரீகம்- புதிய பாடத்திட்டம், பகுதி 2 பாடத்திட்டம் முழுவதும் அடங்கியுள்ள விரிவான நூல் இது. இந்து மெய்ப்பொருளியலும் அறிவியலும் என்ற முதலாவது இயலில் வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை,  சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிசம், மீமாம்சை ஆகிய ஐவகைத் தரிசனங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. வேதாந்த தத்துவ சிந்தனைகள் என்ற இரண்டாவது இயலில் இந்து மத தத்துவப்பிரிவு, சங்கரர் வேதாந்தம்- அத்வைதம், இராமானுஜர் வேதாந்தம்-விசிட்டாத்வைதம், மத்துவர் வேதாந்தம்-துவைதம் ஆகிய உப பிரிவுகள் அடங்கியுள்ளன.  சைவசித்தாந்தம் என்ற மூன்றாவது பிரிவில், அறிமுகம், வேத உபநிடதங்களில் சைவ சித்தாந்தம், ஆகமங்களில் சைவசித்தாந்தம், திருமுறைகளில் சைவசித்தாந்தம், மெய்கண்ட சாஸ்திர நூல்களில் சைவசித்தாந்தம், முப்பொருள் உண்மை அகிய விடயங்களும், இந்து சமய மெய்ப்பொருளாளர்கள் அறிஞர்களின் பணிகள் என்ற நான்காவது இயலில், முருகக் கோட்பாடும் அருணகிரிநாதரும், சமரச சன்மார்க்கமும் தாயுமான சுவாமிகளும், வீரசைவமும் சிவப்பிரகாச சுவாமிகளும் ஆகிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.  ஈழத்துச் சைவ சித்தாந்த அறிஞர்கள் என்ற ஐந்தாவது இயலில் ஞானப்பிரகாச முனிவர், அருணாசல தேசிகர், காசிவாசி செந்திநாதையர்ஆகியோர் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இந்து அறவியல் என்ற ஆறாவது இயலில்அறவியல் ஓர் அறிமுகம், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் நீதி நூல்கள், நான்குவகை ஆச்சிரமங்கள், நான்கு புருடார்த்தங்கள், இந்து அறவியலும் சமண பௌத்தமும், நாட்டார் வழக்காற்றில் அறவியல், இந்து அறக் கோட்பாடும் தற்காலச் சமூகமும் ஆகிய அம்சங்களும், ஏழாவது இயலான இந்து அறிவியல் என்ற ஏழாவது இயலில் இந்து அறிவியல் ஓர் அறிமுகம், இந்து கணிதவியல், இந்து வானியல், சோதிடவியல், இந்துக்களின் மருத்துவம் ஆகிய அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் குப்பிழான் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர் சைவ சித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். பலாலி ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

16408 பாட்டுக்கூத்து.

P.சத்தியசீலன். யாழ்ப்பாணம்: திருமதி கலாதேவி, கலைவண்ணம், சின்னப்பா வீதி, நவாலி தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜீன் 1976. (யாழ்ப்பாணம்;: கவின் அச்சகம், நாவலர் வீதி). 56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: