வி.பி. (டேவிட் வின்சன்ற் பற்றிக்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு 14: பெர்னாண்டோ அச்சகம், 79, செயின்ட் ஜோசப் வீதி).
68 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18.5×13 சமீ.
நான் – உளவியல் சஞ்சிகையின் ஆசிரியரான வின்சன்ற் பற்றிக் அடிகளாரின் இறையியல் நூல் இது. ஆண்டவர் எனது ஆயன், ஆண்டவர் அழைக்கின்றார், இறைமனிதன் கிறீஸ்து யேசு, இயேசு-வார்த்தை, இயேசு வாழ்வின் அப்பம், இயேசு கிறிஸ்துவின் சீடத்துவம், இறைவன் அன்பு செய்கின்றார் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91055).