எஸ்.பி.சாமிநாதர், ஏ.எல்.எம்.இஸ்மாயில் (தொகுப்பாசிரியர்கள்). சாவகச்சேரி: எஸ்.செல்லக்குட்டி, அதிபர், மகாலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1946. (சாவகச்சேரி: இலங்காபிமானி அச்சியந்திரசாலை).
56 பக்கம், விலை: சதம் 75., அளவு: 18.5×12.5 சமீ.
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள் என்ற முப்பாலாரும் போற்றும் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. மத ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் பாடசாலை மாணவர்களை கவரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் (மாமனாகவந்து வழக்குரைத்த படலம்), சீறாப்புராணம் (மானுக்குப் பிணை நின்ற படலம்), தேம்பாவணி (ஐயந்தோற்று படலம்), குசேலோபாக்கியானம், இரட்சணீய யாத்திரீகம் (உயிர்த்தெழுதல்), பன்மணித் திரட்டு ஆகிய அத்தியாயங்களைக்கொண்ட இந்நூலின் இறுதியில் குறிப்புரையும் காணப்படுகின்றது. இந்நூல் உயர்தர தராதரப்பத்திர (SSC,ASC) தர மாணவர்களுக்கு உகந்தமுறையில் தயாரிக்கப்பட்டது.