8128 இந்து சமய சிந்தனைகள்.

க.வி.விக்கினேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், இல.91/5, சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 291 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-387-7.

பல்வேறு இந்துசமய விடயங்களைப்பற்றி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சொற்பொழிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையின் தொகுப்பே இது. பரந்த இந்து சமயத்தின் முக்கியமான ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை அவர் இவ்வுரைகளில் வடித்துப் பிழிந்தெடுத்து சத்துமிகு அமிர்தமாக வழங்கியுள்ளார். திருமந்திரம், இந்து மக்களுக்கு ஒரு கையேடு, இளைய சமுதாயமும் ஆத்மீகமும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, மண்ணில் நல்லவண்ணம் வாழலாம், கொழும்பு சட்டக்கல்லூரி நக்கீரன் மலர் வெளியீடு, சின்மயா மிஷன், ஆன்மீகத் தொண்டர் படையின் முன்னோடிகள், திருவாசகமும் நாமும், உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது, தெய்வீகத் தேனமுதம் தெய்வீக மஞ்சரி, ஈழத்துச் சித்த சிரோமணிகள், பகவான் ஸ்ரீ சத்யசாயி, இந்து விழிப்பு, முத்தமிழ் விழா, ஆறுமுக நாவலர், பேராசிரியர் சி.பத்மநாதனின் இலங்கையில் இந்து சமயம், அகில இலங்கை இந்து மாமன்ற மகாநாடு இலங்கையில் இந்து சமயம் 1, அகில இலங்கை இந்து மாமன்ற மகாநாடு இலங்கையில் இந்து சமயம் 2, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் பவளவிழா, நாவலர் காட்டிய வழியில் வாழ்வோமாக, தெய்வத்திருமகளின் வாழ்வும் பணிகளும், அன்னை கிருஷ்ணாபாய், ஸ்ரீ சபாரத்தினம் சுவாமிகள் குருபூஜையும் திருவாசக விழாவும், தமிழ் மந்திரங்களே திருமுறைகள், நடுத்தீர்ப்பு மையம், கொழும்பு சட்ட மாணவர் இந்து மகாசபை, கலைவிழாவும் நக்கீரன் வெளியீடும் ஆகிய தலைப்பகளில் இவ்வுரைகள்  இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்