விஸ்வநாத சுப்பிரமணிய குருக்கள். லண்டன்: பிரம்மஸ்ரீ விஸ்வநாதசர்மா சுப்பிரமணிய குருக்கள், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xii, 80 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 17.5×12 சமீ.
முதலாவது பாகத்தில் சமயத்தின் ஆரம்பம், அர்த்தமுள்ள இந்து மதம், சுமேரிய நாகரீகம், இந்து மதத்தின் கருவும் உருவும், உருவ வழிபாடு, சடங்கு, ஆலய அமைப்பு, வழிபாட்டு முறை, புண்யாஹவாசனம், பிரதான வழிபாடு என்பனவும், இரண்டாம் பாகத்தில் மதச்சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பிரதான பாகமாகிய மூன்றாம் பாகத்தில் தினம் நீராடுவதால் கடவுள் அருள் கிட்டாது: நம்பினால் கடவுள் நம்பாவிட்டால் கல்/ கோபுரத்தை வணங்குவது ஏன்? கும்பாபிஷேகம் என்பது என்ன?/ வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கும் துடக்கு உண்டா?/ இந்துமதச் சடங்குகளில் ஸம்ஸ்கிருத வடமொழி ஏன்?/தீபம், குடை, சாமரை, விசிறி, கொடி ஆராதனை எதற்காக?/ கும்பம் அதனுள் விடும் தண்ணீர், கும்பத்தை சுற்றும் நூல், முடித்தேங்காய் ஏன்?/ காசி யாத்திரை செல்வோருக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு?/ தேங்காய் ஏன் உடைக்கிறோம்? பூசணிக்காய் உடைத்தால் என்ன?/ தோப்புக்கரணம் போடுங்கள் பிள்ளையார் அருள்புரிவார்/ பிள்ளை பிறந்தாலும் துடக்கு, இறந்தாலும் துடக்கு ஏன்?/பிள்ளையார் பிடிக்க மஞ்சள், பசுஞ்சாணம் உபயோகிப்பது ஏன்?/விவாகத்தின்போது நடக்கும் சடங்குகளின் அர்த்தம் என்ன?/ பூசைக்குப் பணம் கொடுத்தவுடன் திருப்தியடையாதீர்கள்/ வடமொழி உச்சரிப்பு உருது, பாரசீக மொழியிலும் உண்டு/ பின் இணைப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 26 தலைப்புகளுடன் இந்நூல் பிரசுரமாகியுள்ளது. நூலாசிரியர்- பிரித்தானியா வாழ் சிவாச்சாரியார்களில் மூத்தவர். இலங்கை வெள்ளவத்தை பிள்ளையார் கோவில், பேலியகொட பிள்ளையார் கோவில் ஆகியவற்றில் பிரதம குருக்களாகப் பணியாற்றிய வேளையில் லண்டன் விம்பிள்டன் கணபதி கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்திவைக்கும் பொருட்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றவர்.