ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). கொழும்பு: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்).
36 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8911-21-1.
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கை முழுவதிலும் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலை உலகக்கு வழங்கியிருந்தார். தமது தலைமைத்துவத்தின் கீழிருந்த ஒரு மாபெரும் சமூகத்தை, தனக்குப் பின்னர் அதனை வழிநடத்தும் தலைவர் யாரென்பதை அறிவிக்காமலேயே வபாத்தாகினார் என்ற கருத்தும் ஒருசாராரிடையே காணப்படுகின்றது. இந்நூல், அத்தகைய கருத்தை மறுப்பதுடன், நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னர் தம் சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவத்தை இனம்காட்டினார் என்றும் அதனை நாம்தான் விளங்கிக்கொள்வதில் குளறுபடிகள் செய்துவிட்டோமென்றும் இந்நூல் விபரிக்கின்றது. நபி (ஸல்) அவர்களது இனம்காட்டலை விளங்கிக்கொள்வதில் கொண்டிருந்த விருப்பமின்மை, முரட்டுப் பிடிவாதம், குறுகிய அரசியல் இலாப நோக்குகள் என்பன பின்னைய முஸ்லீம் சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரித்து உலகளாவிய ரீதியில் அவர்களைப் பலவீனப்படுத்தியும் விட்டதென இந்நூல் கூறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229811).