முஹம்மத் குதுப் (மூலம்), அபூ உபய்தா, ஜே.எம்.காசிம் (தமிழாக்கம்). கொழும்பு 9: இஸ்லாமிய பிரசுர நிலையம், 204/1 தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், ஐ.பீ.சீ.பிரின்டிங் பிரஸ், 320 என்.எம்.எம். இஷாக் மாவத்தை).
373 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
ஆராயஅஅயன ஞரவடி ஆங்கிலத்தில் எழுதிய Islam – the misunderstood Religion என்ற நூலின் தமிழாக்கம் இது. இஸ்லாம் காலம் கடந்ததா? இஸ்லாமும் அடிமைத்தனமும், இஸ்லாமும் நிலமானியமும், முதலாளித்துவம், தனியுடைமை, வர்க்கபேதம், ஈகை, பெண்கள் நிலை, தண்டனை, நாகரீகம், பிற்போக்குவாதம், பாலுணர்வு, சிந்தனைச் சுதந்திரம், மதம்: மக்களுக்கு அபின், பிற சமூகங்கள், இலட்சியவாதம், கம்யூனிசம், அடுத்தது என்ன ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2080).