8213 பேரலைகளின் பின்னர்: இலங்கையில் பெண்கள் மீது சுனாமியின் தாக்கம்.

நெலுபர் டி மெல், காஞ்சனா என்.ருவன்புர, கமீலா சமரசிங்க (பதிப்பாசிரியர்கள்). க.சண்முகலிங்கம்,  மு.பொன்னம்பலம், எஸ்.திரிவேணிசங்கமம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12 சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 06: குமரன் பதிப்பகம், இலக்கம் 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

iv, 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1772-91-8.

மூன்று பகுதிகளைக்கொண்ட இந்நூலில் மொத்தம் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  பகுதி 1இல் அறிமுகம்-பேரிடரின் உருவாக்கம்: சுனாமியின் பின்னணியும் இலங்கையில் பெண்கள் மீது அதன் தாக்கமும் (நெலுபர் டி மெல்), பின்-சுனாமி இலங்கையில் பெண்ணியம், மோதல் மற்றும் அழிவுகள் (ஜெனிபர் ஹைன்ட்மான்), இடப்பெயர்வின்போது பெண்கள் தமது சொத்துக்களை இழத்தலும் வறியோராதலும் – கிழக்கிலங்கையில் யுத்தம், சுனாமி என்பவற்றின் பின்னணியிலான ஓர் ஆய்வு (கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்,  றஞ்சித் று.னு.லக்ஷ்மன்) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 2ஆவது பகுதியில் சுனாமி அலைகளும் யதார்த்த நிலையும் – இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய அபிவிருத்தி நடவடிக்கை பற்றிய பால்நிலை நோக்கு முறையிலான ஓர் ஆய்வு (காஞ்சனா என்.ருவன்புர), சுனாமிப் பேரலையின் பால்நிலைத் தாக்கம்- இலங்கையின் சில மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணம், மறுவாழ்வு, புனரமைப்புத் திட்டங்கள் குறித்த ஓர் ஆய்வு (சாவித்திரி குணசேகர),  மிகக் கடுமைமிக்க  ஒருகடந்து செல்லல்: தாக்கப்படுவதற்குரிய நிலைகளிலிருந்து பின்சுனாமி இழப்பீடு மற்றும் குடியமர்த்தல் பற்றிய பேச்சுவார்த்தை (சிந்தியா எம்.கரொன்), பேரிடருக்குப் பிந்திய அபிவிருத்தியும் மாற்றமும்: ஒரு பால்நிலை நோக்கு (சரளா இம்மானுவேல்) ஆகிய நான்கு கட்டுரைகளும், மூன்றாம் பகுதியில் சுனாமியும் பெண்கள் மீதான உளப்பாதிப்பும் (ஹமீலா சமரசிங்க), 26 டிசம்பர் 2004 சுனாமியும் அதன் பிறகும்: பெண்களின் கதைகளைத் தேடி (காயத்திரி திவகலா),  யுத்தம் நிகழும் பகுதி ஒன்றில் சுனாமியின் தாக்கத்தால் எழுந்த சமூக-உளவளப் பாதிப்புகளை எதிர்கொள்ளல்: இலங்கையின் வடபகுதியின் அனுபவங்களினை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு (மரியன் வன்டர்வீன், தயா சோமசுந்தரம்), இலங்கையின் தென் பகுதியில் சுனாமியால் பாதிப்புற்ற மக்கள் மத்தியில் வேலை செய்தல்: உள்ளத்தை வலுவாக்குவதன்மூலம் மறுவாழ்வை ஏற்படுத்துதல் பற்றிய சில கதைகள் (அசங்க திலகரத்தின) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் பகுதி 1இலுள்ள 2வது கட்டுரை எஸ்.திரிவேணிசங்கமம் அவர்களாலும், பகுதி 2இலுள்ள ஆறாவது கட்டுரை மு.பொன்னம்பலம் அவர்களாலும் எஞ்சிய 9 கட்டுரைகளும் க.சண்முகலிங்கம் அவர்களாலும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best Us Erreichbar Kasino Bonuses & Sign

Content Spielsaal 400% Provision Aufführen Diese Gleichwohl Spiele, Unser Qua 100 % Gewertet Sie sind Kasino Provision Within Canada 2024 Wie gleichfalls Vermag Man Einander