8214 யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்.

பரம்சோதி தங்கேஸ். United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ  1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

160 பக்கம், அட்டவணைகள், விலை:  இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-908076-7-8.

யுத்தம், இடப்பெயர்வு மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியால் தூண்டப்பட்டு மாற்றத்துக்குள்ளாகும் அடையாளங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் நான்கின் தொகுப்பு இது. யாழ்ப்பாணத்தில் சாதி: மரபும் மாற்றமும் (பரம்சோதி தங்கேஸ்), யாழ்ப்பாணச் சமூகத்தின் புலப்பெயர்வு, பணவருவாய் மற்றும் சாதி, வகுப்பு, மத அடையாளங்களின் இயங்குநிலைகள் (பரம்சோதி தங்கேஸ்), யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களும் (பரம்சோதி தங்கேஸ், காலிங்க டியுடர் சில்வா), யாழ்ப்பாணத்தில் சாதியமும் இனத்துவமும்: அடையாளக் கட்டுமானங்கள் (பரம்சோதி தங்கேஸ்) ஆகிய நான்கு ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சாதியும் குலதெய்வங்களும்,  சாதியும் சாதித் தொழில்களும், சாதிக்குள் சாதி, மல்லாகத்தில் சாதி, மல்லாகத்தின் சாதியும் உள்ளுர் மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வும், மல்லாகக் கிராமத்தின் உள்ளுர் மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வுக்கான காரணங்கள், மல்லாகக் கிராமத்தின் பணவருவாய் மூலங்கள், யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிகள், சாதியும் மல்லாகத்தில் அகதி முகாம்களில் வாழும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் பரம்பலும் ஆகிய அட்டவணைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல்துறையில் கலைமாணிப்பட்டம் பெற்ற பரம்சோதி தங்கேஸ், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் அகதிகள் கற்கையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறையில் விரிவுரையாளராகவும் இலங்கையிலுள்ள திட்டமிடல் சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆய்வாளராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்