தேர்தல் பிரச்சாரப் பிரிவு. கொழும்பு: வெளியீட்டாளர் விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 10: Print and Print Graphics Ltd., Maligawathe).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
2005 ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு வேட்பாளராகவிருந்தார். தனது கொள்கை விளக்கத்தை வாக்காளரிடையே வெளிப்படுத்தும் வகையில் இச்சிறு நூல் அவரது ஆதாரவாளர்களால் வெளியிடப்பட்டிருந்தது. குடும்பத்தின் வாழ்க்கைப் பளுவைக் குறைப்பதற்கு, சமுர்த்தி, ஜனசெவன வேலைத்திட்டங்கள், சுபீட்சமுள்ள கிராமம், நாட்டை வளப்படுத்துதல், பிரிக்கப்படாத இலங்கை, இணக்கப்பாடு-கௌரவமான சமாதானம், எரிபொருள் கொள்கை, பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்னோரன்ன திட்டங்களை இந்நூல் கொள்கை விளக்கங்களாக பதிவுசெய்திருக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37443).