8226 லண்டன் விசா வழிகாட்டி: யூ.கே.

நுழைவு அனுமதிக்கான எளிய வழிமுறைகள் (கேள்வி-பதில் வடிவத்தில்). வ.மா. குலேந்திரன். தமிழ்நாடு: பாலம் வெளியீடு, இல.1, 4வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020, 1வது பதிப்பு, 2007. (சென்னை 600005: ஸ்ரீ ராகவேந்திரா லேசர் பிரிண்டர்ஸ், 15 தானப்பசெட்டித் தெரு, திருவல்லிக்கேணி).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 85.00, அளவு: 17.5×12 சமீ.

இந்நூலாசிரியர் தமிழினி குலேந்திரன், லண்டன், சர்வதேச அகதிகள் நிறுவனத்தின் இயக்குநரும், குடிவரவு ஆலோசகருமாவார். U.K.நுழைவாயில், மாணவர்கள், வருநர் (Visitors), வேலையுடன் கூடிய சுற்றுலாப் பயணிகள் (Working Holiday Visa), திருமணம் (Marriage), வேலை செய்தல் (Work Permit Scheme), வேலைக்கான உரிமமற்ற வேலைகள் (Employment not requiring work permit), பெற்றோரை அழைத்தல், அரசியல் தஞ்சம், U.K.யில் விசா நீடிப்பு, ஐரோப்பிய பொருளாதார வலயம், தத்தெடுத்தல், பொது வினாக்கள், மேன்முறையீடுகள், ஆகிய விடயங்களை விரிவாகத் தனித்தனி இயல்களில் இந்நூல் விளக்குகின்றது. பின்னிணைப்புகளாக நுழைவு அனுமதி பெறும் விண்ணப்பங்கள், விசா பெறவேண்டிய நாட்டினர், முக்கியமான முகவரிகள், விசா நீடிப்பு விண்ணப்பங்கள், பதச்சொற்கள், லண்டனில் சுற்றிப் பார்க்கும் இடங்கள், கல்வி நிலைய விபரம் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்