ராஜரட்ணம் ருக்ஷான், சுபாஜினி சண்முகராஜா, தட்சாயினி குலேந்திரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 241 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-332-7.
1948 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் கைக்கொள்ளப்பட்ட இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை இந்நூல் விபரிக்கின்றது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி தமிழில் கற்கின்ற மாணவர்களுக்குப் போதியளவு நூல்கள் இல்லாத நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கை-ஓர் அறிமுகம், இலங்கையின் மேற்குசார் வெளிநாட்டுக் கொள்கை (1948-1956), இலங்கையின் அணிசேராக் கொள்கை: ஒரு மீள்மதிப்பீடு (1948-1960), ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிநாட்டுக்கொள்கை (1960-65 மற்றும் 1970-77), ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிநாட்டுக்கொள்கை (1977-1988), 1970களுக்குப் பின் இலங்கையின் அணிசேரா அரசியலில் பழைமைபேண் வாதமும் தீவிரவாதப் போக்கும், பிரேமதாசவின் வெளிநாட்டுக்கொள்கை (1989-1993), சந்திரிகாவின் வெளிநாட்டுக்கொள்கை (1994-2005), இலங்கை-இந்திய உறவு ஆகிய ஒன்பது தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை (1947), ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலானவெளிவிவகார உடன்படிக்கை (1947), ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1964), இணைப்பு சீ, திம்புப் பிரகடனம் (1985), இந்திய-இலங்கை உடன்படிக்கை (1987), மோதல் தடுப்பு ஒப்பந்தம் (1995) ஆகிய ஏழு ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ராஜரட்ணம் ருக்ஷான், கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக்கொள்கைகள் துறையில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். சுபாஜினி சண்முகராஜா, கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக்கொள்கைகள் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றவர். அத்துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தட்சாயினி குலேந்திரன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப்பட்டம் பெற்றவர்.