8249 சட்டம் , சமயம்,  ஆட்சி: வரலாற்று ஆய்வு.

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. கல்முனை: எஸ்.ஏ.ஐ.மத்தியு, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கல்முனை: கோல்டன் அச்சகம்).

xiv, 78 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51857-7-6.

இந்நூலில் பாபிலோனிய மன்னன் நெபுகட்நேசர் தொகுத்த ஹமுராபி சட்டம், எஹிப்திய சட்டத்தொகுப்பு, கிரேக்க சட்டத்தொகுப்பு, உரோம சட்டத்  தொகுப்பான Code of Nepolion என்பவற்றுடன் இலங்கையின் ஆதிகால இராஜகாரிய சட்டத்தொகுப்பு, ரோம-டச்சுச் சட்டம், தேசவழமைச் சட்டம் ஆகியன பற்றிய விரிவான ஆய்வு இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர் அருட்திரு சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ எழுதிய இந்நூல் கி.மு.1350 காலப்பகுதியில் எகித்திய சாம்ராஜ்யத்தின் மன்னனான அக்கினேட்டனை (மோசே, மோயீசன்) முதன்மைப்படுத்துகின்றது. மோயீசனின் பத்துக் கட்டளைத் தொகுப்பில் பல்வேறு சட்டங்களைக் காணமுடிகின்றது. அரசன் இறைவனின் பிரதிநிதி, ஏகதெய்வ வழிபாடு, பெற்றோரை மதித்துக் கனம்பண்ணல், முதியோரைப் பராமரித்தல், கொலை, களவு, விபச்சாரம் செய்யாதிருத்தல், பொய்ச்சாட்சி கூறாதிருத்தல், போன்ற பல சிறந்த அம்சங்களை பத்துக் கட்டளைகள் உள்ளடக்கியுள்ளதை  இந்நூல் விரிவாக எடுத்துவிளக்குகின்றது. இன்று உலகெங்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவிருப்பது அக்கினேட்டனின் பிரகடனத்தின்படியே என்ற செய்தியையும் ஆசிரியர் தருகிறார். ஏக கடவுளின் ஆட்சியில் சட்டங்கள் மானிட நன்மைக்காகவே என்பதை வலியுறுத்தும் இந்நூல், பங்கேற்பும், பொறுப்பும் மறுக்கப்படுவதன் வழியாக புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவே என்னும் உண்மையை நிலைநிறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்