வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே. நாவலர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, காங்கேசன்துறை வீதி).
vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
க.பொ.த. உயர்தர மாணவர்களின் பொருளியல் பாடத் தேவைகளான சந்தைத் தோல்வி, வெளிவாரி விளைவுகள், அரச தொழிற்பாடுகள் ஆகிய மூன்று அம்சங்களையும் இந்நூல் விளக்குகின்றது. 2012 புதிய பாடத்திட்டங்களுக்குரிய இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய ஆசிரியராவார். இந்நூலில் சந்தைத் தோல்விக்கான காரணிகளாக வினைத்திறனின்மை, நியாயத்துவமின்மை, பேரினப் பொருளாதார உறுதியின்மை ஆகியவற்றை விளக்கும் ஆசிரியர் வெளிவாரி விளைவுகள் என்ற பிரிவில் உற்பத்தியிலும் நுகர்விலும் எதிர்க்கணிய/நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள், வெளிவாரிச் சிக்கனங்கள்/சிக்கனமின்மைகள், தனியார்/ சமூகச் செலவின் நன்மைகள் மற்றும் வேறுபாடுகளை விளக்குகின்றார். அரசின் தொழிற்பாடுகளில் வள ஒதக்கிட்டில் வினைத்திறன், வளப் பங்கீட்டில் நியாயத்துவம், சட்டங்கள் நல்லாட்சி, பொருளாதார உறுதி, பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி, கீழ்க்கட்டமைப்பு வசதிகள், இலங்கைப் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகின்றார்.