ஜெ.வசந்தி. திருக்கோணமலை: திருமதி வசந்தி ஜெயராஜ், வானவில் வெளியீடு, 67ஏ, கஸ்கிசன் வீதி, 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல.43, திருஞானசம்பந்தர் வீதி).
164 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0469-00-0.
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் வசந்தி உள்ளுராட்சி தொடர்பாக எழுதும் இரண்டாவது நூல் இதுவாகும்.இவரால் எழுதப்பட்ட உள்ளூராட்சிக் கட்டமைப்பில் நல்லாட்சி என்ற நூல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு கண்ணோட்டம், உள்ளூராட்சி மன்றங்களின் நோக்கங்கள், நோக்கங்கள் நிறைவடைய உள்ளூராட்சி மன்றங்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் முறைகள், நிறுவன ஆய்வு மற்றும் நிறுவனத் திட்டமிடல், தவிசாளர் உறுப்பினர்கள் கடமைகளில் அக்கறை செலுத்தல், மனிதவளத் திட்டமிடலும் அலுவலக ஒழுங்கு முறைகளும், மக்கள் குறைகேள் திட்டத்தினை மேம்படுத்தல், பங்கேற்பு ரீதியான திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்டமிடல், மக்களுக்கு உள்ளூராட்சி சேவைகள் பறறிய தகவல்கள் வழங்கல் முடிவுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.