8273 கல்வியில் முன்னேற: உளவியல் கட்டுரைகள்.

திருமதி பஞ்சநாயகி பிரான்சிஸ்கா சின்னத்துரை. யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.அச்சகம், பண்டத்தரிப்பு).

xii, 92 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

கல்வித்துறை சார்ந்த  உளவியல் நூல் இது. கற்றலில் ஊக்குவிப்புகள், குழந்தைகளின் தாழ்வுமனப்பான்மைக்கான காரணிகளும் அதனை நீக்குவதற்கான வழிமுறைகளும், கற்றலில் முதிர்ச்சியின் பங்கும் ஆசிரியர் செயற்பாடுகளும், பிரச்சினைக்குரிய குழந்தைகளும் ஆசிரியர் அணுகுமுறைகளும், கட்டிளைஞரின் மன எழுச்சிப் பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதில் பாடசாலைகளின் பங்களிப்பும், மெல்லக்கற்கும் மாணவர்க்கான கற்பித்தல் விதிமுறைகள், கற்றலில் ஞாபகமும் அதில் குறுக்கிடும் காரணிகளும், உளநலத்தில் புன்னகை, ஆசிரியத்துவ உள மாட்சியும் அதில் ஏற்படும் தாக்கங்களும், கற்றலில் மீள வலியுறுத்தல் பற்றிய ஸ்கின்னரின் கோட்பாடுகளும் அவற்றின் வகுப்பறைப் பயன்பாடுகளும், பாடசாலை அதிபரின் தலைமைத்துவப் பண்புகள், மாணவர்களின் அச்சவுணர்வுகளும் அதன் தாக்கங்களும், நல்லாசிரியரின் தோற்றப்பாடுகள், ஆரம்பப் பிரிவு மாணவருக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள், ஆசிரியரின் பாடத்திட்டமிடலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், குடும்பம்-கல்வி-இடைவினை, பாடசாலையில் சிறுவரிடையில் இசைந்துடன்படலை வளர்த்தல், ஆசிரியரின் தொழில்சார் திருப்திக்கான தடைகள், உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தல், புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஆரம்பக் கல்வி- கலைத்திட்டத்தின் முக்கியத்துவம், வினைத்திறன் மிக்க  பரிகாரக் கற்பித்தல் முறை ஆகிய 21 தலைப்புகளில்  கல்வியியல் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  139572).

ஏனைய பதிவுகள்

16990 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 04 (1936-1949).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: