மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). நுவர எலிய ADP: World Vision, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (ஹட்டன்: யுனிவர்சல் அச்சகம்).
(10), 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0936-00-7.
மொழிவரதன் என இலக்கிய உலகில் அறியப்பட்ட கருப்பையா மகாலிங்கம் கல்வித்துறையில்- குறிப்பாக, இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தர அதிபராகப் பணியாற்றியவர். இவரது கல்வியியல்சார் அனுபவங்களின் வெளிப்பாடாகப் பல கட்டுரைகளை எழுதி அவ்வப்போது வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்துள்ளார். இந்நூல் மலையகக் கல்விநார்ந்த அவரது 31 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருகின்றது.