சசிகலா குகமூர்த்தி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).
xiv, 110 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-017-8.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி கல்வித்துறையில் மூன்று தசாப்தங்களாகப் பணியாற்றுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். தமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர். அறிமுகம், பண்டைய யாழ்ப்பாணத் தமிழ் மரபில் பெண்கல்வி, போர்த்துக்கேயர் வருகையும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களின் கல்வி மரபு மாற்றங்களும், ஒல்லாந்தர் வருகையும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களின் கல்வி மரபு மாற்றங்களும், பிரித்தானியர் ஆட்சியில் யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி நிலைமைகள், ஆய்வின் ஒன்றுகூட்டிய தொகுப்பு ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.