சி.மனோகரன், நா.வரதராஜா, க.முகந்தன் (மலராசிரியர்கள்). பிரான்ஸ்: மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 3, Square Jodulet, 93420 Villepinte, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (பிரான்ஸ்: சங்கீதா அச்சகம்).
88 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை (1872-1929) அவர்களால் 1910இல் தாபிக்கப்பட்ட மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவையிட்டு புலம்பெயர்ந்து வாழும் அதன் பழைய மாணவர்களால் இம்மலர் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் வரலாறு, எனது தந்தையாரின் ஞாபகங்கள் (தெ.து.தர்மராஜா), அதிபர் ஜெயரத்தினம்- அவர் கனவு நினைவு அத்தனையும் மகாஜனாவின் வளர்ச்சி எழுச்சி (பொ.கனகசபாபதி), தெல்லிப்பழை (பொ.இரகுபதி), வெல்லுக மகாஜன மாதா (சிவமலர் அநந்தசயனன்), என்னால் முடிந்தது (பொ.கனகசபாபதி) ஆகிய கட்டுரைகளுடன் புவனன், பா.வை.ஜெயபாலன், க.முகுந்தன், இளவாலை விஜயேந்திரன், ஜெயக்குமார், ச.சுதர்சன், யோ.சிவலிங்கம், அ.ரவி, பாலசூரியன், பொ.ராஜகாந்தன், வாசுகன், நா.சண்முகலிங்கன் ஆகியோரின் மலரும் நினைவுகளும் நூலின் முதற்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. பிரான்ஸ் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் கடந்த 19 ஆண்டுக்கால செயற்பாடுகள் பற்றிய படைப்புகள் மலரின் பிற்பகுதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.