மலர்க் குழு. பிரான்ஸ்: பாரிஸ் தமிழர் கல்வி நிலையம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (பிரான்ஸ்: ஸ்ரீபாரதி அச்சகம், பாரிஸ்).
186 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.
பாரிஸ் தமிழர் கல்வி நிலையத்தின் வெள்ளிவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புமலர். வாழ்த்துரைகள், கல்வி நிலையம் தொடர்பான ஆவணப் புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. கவிதை கற்பித்தலில் இசைப்பாடல்களின் பங்கு (முரசு நெடுமாறன்), தொழில் முயற்சியாளர்களின் குணாதிசயங்கள் (பா.நிமலதாசன்), அன்பு அப்பாவும் ஆசை மாமாவும் (கவிஞர் சோதியா), புதிய பாதைகளிலும் (ஓவியர் மருது), ABACUS (ஜெயக்குமார்), பரத நாட்டியத்திற்கு அடிப்படையாக விளங்கும் அடவுகள் பற்றிய ஒரு சிறு நோக்கு (செந்தில்குமரன் கலைவாணி), வேர்களை நேசிக்கும் விழுதுகள்- பரிசுக் கதை (பத்மாஷினி மாணிக்கரட்ணம்), புலம்பெயர் தமிழ் இளையோரும் புலம்பெயர் பாடசாலைகளும் (வேந்தனார் இளஞ்சேய்), சுட்டிப் பாப்பாவுக்கு ஒரு குட்டிக் கதை (கலைஞர் பரா), மென்கணினியாக்கம் (சுரேஷ் யாழ்வாணன்), புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தன்முகம் இழக்குமா? (அமலினி யூலியன்), தமிழம்மா-பரிசுக் கவிதை (ஈழவன்), இசைக் கருவிகள் (லலிதா கிரிதரன்), அன்றைய கண்ணாடிகளில் இன்றைய முகங்கள் (திருமதி ராஜன்), கணினியில் இனிய தமிழ் (தங்கராஜா தவரூபன்), மனிதநேயத்தை நேசித்த ஒரு இலக்கியவாதியின் நினைவுகள் (கௌரி), மாறிவரும் இயற்கை (ஜெயமோகன் ஜனார்த்தனன்), L’Enseignement en France (அச்சதன்) ஆகிய கட்டுரைகள் இம்மலரை பொலிவாக்குகின்றன. மலேசியா, இலங்கை, பிரான்ஸ், தமிழகம், ஜேர்மனி, லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து இம்மலருக்கான ஆக்கங்களை கட்டுரையாளர்கள் வழங்கியுள்ளனர்.