8288 வணிகத் தகவல் முறைமைகள்.

விக்டோரியா றொசானா றாகல், அந்தோனிப்பிள்ளை அன்ரன் அருள்ராஜ்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-386-0.

வணிகத் தகவல் முறைமைகள் என்னும் இந்நூல் க.பொ.த. உயர்தரத்தில் வர்த்தகத்துறையில் வணிகக் கற்கைகள் என்னும் பாடத்தில் வணிகத் தகவல் முறைமைகள் தொடர்பான பாடத்திட்டங்களைக் கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ளதுடன் ஏனைய பாடசாலை மற்றும் பல்கலைக் கழகக் கல்வி முறைகளில், வணிகம்சார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைகள் தொடர்பான அறிவினைத் தமிழ்மொழியில் பெற்றுக்கொள்வதற்கான ஒரு கையேடாகவும் முதல் நூலாகவும் அமைகின்றது. வணிகமும் தகவல் முறைமைகளும், தரவுகளையும் தகவல்களையும் ஒழுங்கமைத்தல், தகவல் முறைமைகளுக்கான ஓர் அறிமுகம், வியாபாரத் தகவல் முறைமைகளை வகைப்படுத்தல், பயன்படுத்தப்படும் முகாமைத்துவ மட்டங்களின் அடிப்படையில் தகவல் முறைமைகள், தொழிற்பாடுகளின் அடிப்படையில் தகவல் முறைமைகள், தகவல் தொழில்நுட்பம், கணினி வலையமைப்புகள், இணையத் தொழில்நுட்பமும் அதன் வணிகப் பயன்பாடும், இலத்திரனியல் வர்த்தகமும் வியாபாரமும் ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. விக்டோரியா றொசானா றாகல், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் சிரேஷ்டவிரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். அந்தோனிப்பிள்ளை அன்ரன் அருள்ராஜ் முகாமைத்துவத் தகவல் முறைமைகள் மற்றும் மனிதவள முகாமைத்துவம் ஆகிய துறைகளின் சிரேஷ்ட விரிவுரையாளராக அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Zeus Funciona

Content ¿cómo Jugar Tragamonedas Sobre Casino Gratuito? – 50 giros gratis danger high voltage Remera Divertida Máquina Tragamonedas Inicial Gamer Casino Puedes participar a dichos