8287 வணிகக் கணக்கீடு பகுதி 2.

எல்.பி.ஞானப்பிரகாசம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம்,  B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).

(6), 215 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 30×22 சமீ., ISBN: 978-955-659-244-3.

கம்பெனிகளின் மூலதனக் கணக்குகள், கம்பெனியின் நிதிக் கூற்றுகள், கணக்கீட்டு விகிதங்கள், கிரயக் கணக்கீடு, எல்லைக் கிரயக் கணக்கீடு, முதலீட்டுத் தீர்மானங்கள் ஆகியஆறு இயல்களையும் இலங்கை கணக்கீட்டு நியமம், மாதிரி வினாப்பத்திரங்கள்  மற்றும் விடைகளை பின்னிணைப்புகளாகவும் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிகப் பட்டத்தைப் பெற்றவர். பொத்துவில் முஸ்லிம் மகாவித்தியாலயம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றியவர். தற்போது ஓய்வுபெற்று தனியார்துறையில் கணக்கீடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்